ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை உட்பட பல மாவட்டங்களுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (13-02-2025) வெளியிட்டுள்ளார்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தியூர், பவானி சாகர், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளராக என்.நல்லசிவம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பவானி, பெருந்துறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்லடம், திருப்பூர் தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக க.செல்வராஜ் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கேயம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவிநாசி, திருப்பூர் வடக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக என்.தினேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருக்கோவிலூர், விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக கெளதம சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம், வானூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளராக ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை வடக்கு, மதுரை மத்திய, மதுரை தெற்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக கோ. தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த க.அண்ணாதுரை எம்.எல்.ஏ விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பழனிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த டி.பி.எம். மைதீன்கான் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அப்துல் வகாப் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த பா.மு.முபாரக் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.எம்.ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த கோவிந்தராஜன் எம்.எல்.ஏ விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.