திருச்சி ஊர் காவல் படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது….
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்.
திருச்சி மாவட்ட ஊர்க்காவல்படையில் தற்சமயம் 51 ஆண் மற்றும் 05 பெண் ஊர்காவல் படையினர் (மொத்தம் 56) தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே கீழ்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கோரப்படுகிறது :
கல்வி தகுதி – பத்தாம் வகுப்பு (தேர்ச்சி/தோல்வி), வயது 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும், மேற்கண்ட தகுதியுடையோர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க கூடாது. மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்தகுதி தேர்வில் தளர்வு வழங்கப்படும். விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5/- தபால் தலை ஓட்டிய சுய முகவரி எழுதப்பெற்ற உறையுடன் “காவல் சார்பு ஆய்வாளர், ஊர்க்காவல்படை அலுவலகம், சுப்பிரமணியபுரம், ஆயுதப்படை வளாகம், திருச்சி – 620 020 என்ற முகவரிக்கு 05-11-2023-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகின்ற 08.11.2023-ம் தேதி காலை 7 மணிக்கு திருச்சி சுப்பிரமணியபுரம், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.