அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராமநாதபுரத்தை சேர்ந்த அன்வர்ராஜா அ.தி.மு.க.வில் சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளராக பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் உட்கட்சி பிரச்சினை எழுந்தபோது சசிகலாவுக்கு ஆதரவான கருத்துக்களை கூறி வந்தார். அத்துடன் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வந்தார். அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சித்தார்.
இதனால், கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அ.தி.மு.க. தலைமை கடந்த 2021-ம் ஆண்டில் நீக்கியது. தற்போது அ.தி.மு.க. தலைமை எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளதாலும், கட்சியை பலப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாலும் கட்சியிலிருந்து சென்றவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று (04-08-23) எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அன்வர்ராஜா மீண்டும் தன்னை அ.தி.மு.க. வில் இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்ற பேச்சுக்கள் வலுப்பெற்று இருக்கும் நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அன்வர்ராஜாவை மீண்டும் அதிமுக கட்சிக்குள் இணைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.