திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, உள்ளூர் சேவைகளாக சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், அதிகபட்ச விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது. உள்ளூர் விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் கடந்த வாரம் தினசரி ஒரு சேவை தொடங்கப்பட்டது. இதில் கட்டணம் குறைவாக இருந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனிடையே திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ நிறுவனம் மட்டும் சேவை வழங்கி வந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வாரத்திற்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விமானம் இயக்க முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த சேவையானது இன்று(01-04-2025) காலை முதல் தொடங்கியது. திருச்சியில் இருந்து பெங்களூருக்கு 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 7-45 மணிக்கு பதிலாக முன்னதாகவே காலை 7.10 மணிக்கு சென்றது. மீண்டும் இந்த விமானம் பெங்களூருவில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு இரவு 7-45 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவிற்கான புதிய விமான சேவையால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Comments are closed.