Rock Fort Times
Online News

திருச்சி மாநகரில் நாளை ஜனவரி 22-ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு…!

திருச்சி, தென்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (22.01.2025) புதன் கிழமை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர் காலனி, தென்னூர் ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரி ரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட் ரோடு, மேலபுலிவார்டு ரோடு, ஜலால்பக்கிரி தெரு, ஜலால்குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷா தெரு, பெரியகடைவீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு,பாபு ரோடு, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, கிலேதார் தெரு, சப்-ஜெயில் ரோடு, பாரதிநகர், இதாயத் நகர், காயிதே மில்லத்சாலை, பெரியசெட்டி தெரு, சின்னசெட்டி தெரு, பெரியகம்மாள தெரு, சின்னகம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சைரோடு, கல்மந்தை, கூனிபஜார் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இதேபோல, வரகனேரி துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் மகாலெட்சுமி நகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர்,ஏ.பி.நகர், விஸ்வாஸ் நகர், வசந்த நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், பாரதிநகர், கலைஞர் நகர், ஆறுமுகா கார்டன், பி.எஸ்.நகர், பைபாஸ் ரோடு, வரகனேரி, பெரியார் நகர், பிச்சை நகர், அருளானந்தபுரம், அன்னை நகர், மல்லிகைபுரம், படையாச்சி தெரு, தர்மநாதபுரம்,கல்லுக்காரத்தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழ்புதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம் நகர், சங்கிலியாண்டபுரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்திதெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமாநகர், பென்சினர் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்தபுரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு மற்றும் பஜனை கூடத்தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும், காத்தலும், திருச்சி தென்னூர் நகரியம் செயற்பொறியாளர் கே.ஏ.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்