Rock Fort Times
Online News

திருச்சி லால்குடி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடி துணை மின் நிலையத்தில் நாளை ( 30.11.2023 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூர், ஒரத்தூர், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூர், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூர், கருடமங்கலம், வந்தலைக்கூடலூர், சிறுவயலூர், காணக்கிளியநல்லூர், பெருவளப்பூர், தச்சங்குறிச்சி, புஞ்சை சங்கேந்தி, விசிபுரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூர், ஆ.மேட்டூர், நத்தம், திருமாங்குடி, டி.கல்விக்குடி , ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியூர், கல்லகம், கீழரசூர் மற்றும் புள்ளம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்