பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதனைத்தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கருணாநிதி ஆகியோரின் உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், இனிகோ. இருதயராஜ் , கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் பி.எம்.ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள்.
Prev Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.