மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர் கெட்டுப் போய்விட்டதாக அமித்ஷாவிடம் அண்ணாமலை அறிக்கை கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் தொடர் கொலைகள் உள்ளிட்டவை குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம், அண்ணாமலை அறிக்கை சமர்ப்பித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் ஓ.பன்னீர்செல்வம், அமித்ஷாவை சந்தித்த நிலையில் தற்போது அண்ணாமலை சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Comments are closed.