தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் இன்று (ஏப். 19) காலை தனது சொந்த ஊரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூடாமணி பஞ்சாயத்துக்கு உள்பட்ட ஊத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு வேண்டுகோள் நீங்கள் எங்கு இருந்தாலும் இன்று மாலைக்குள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள். அப்போது தான் நாட்டில் நல்ல ஆட்சி உருவாகும். தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டு வருகிறது. கோவையில், பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இத்தேர்தல் இருக்கும் என்றார். இந்த தேர்தலில் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை,
நல்ல பாடம் என்றால் முதல்வர் சொன்னபடி பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.