அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் எதிரொலி! திருச்சி, அரசு மருத்துவக்கல்லூரியில் பாதுகாப்பு தீவிரம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுந்த பாலியல் புகார் தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுரை வழங்கியுள்ளது .அந்த வகையில் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி மிளகு பாறை பகுதியில் அமைந்துள்ளது. இதன் பிரதான நுழைவு வாயில் கலெக்டர் அலுவலக சாலையில் மிளகுபாறை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த அரசு மருத்துவக் கல்லூரியின் பின்புறச் சுவர், திருச்சி மத்திய பேருந்து நிலையம் வ.உ.சி சாலையில் அமைந்துள்ளது. சங்கீதாஸ் ஹோட்டலில் இருந்து ரோஷன் மஹால் வரை செல்லும் சாலையில் மருத்துவக் கல்லூரிக்கு உள்ளே செல்லும் வகையில் பின்புற நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பின்புற நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், எளிதில் கல்லூரியையும், ஊழியர்கள் குடியிருப்பு பகுதியையும் அடைந்து விடலாம். இந்த நுழைவாயில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. பிரதான நுழைவு வாயில் மற்றும் பின்புற நுழைவு வாயிலில் பாதுகாவலர்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகார் எதிரொலியாக இந்த பின்புற நுழைவு வாயிலை அடைக்கும் பணியில் மருத்துவ கல்லூரி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நுழைவாயிலை நிரந்தரமாக மூடும் வகையில் சுவர் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் மிளகு பாறை செல்லும் சாலையில் உள்ள நுழைவு வாயிலும் மூடப்படுகிறது.
Comments are closed.