அண்ணா நினைவு நாள்: அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நாளை அமைதி ஊர்வலம்-மாவட்ட செயலாளர் வைரமணி அறிக்கை…!
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் க.வைரமணி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நாளை(03-02-2024) சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் கலைஞர் அறிவாலயத்திலிருந்து கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையிலும், மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையிலும் அமைதி ஊர்வலம் புறப்பட்டு சிந்தாமணியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில், மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.