திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்…- 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு..!
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.12,000 வழங்க வேண்டும், பேஸ் கேப்சியர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் கால வரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ராணி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட சிஐடியு செயலாளர் ரங்கராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி, மாவட்டத் துணைத் தலைவர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் விளக்க உரையாற்றினர்.இந்தப் போராட்டத்தில் மாநில, மாவட்ட, நிர்வாகிகள், வட்ட, கிளை நிர்வாகிகள், ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.