Rock Fort Times
Online News

திருச்சி அம்மாமண்டபத்தில் பழமையான அரச மரம் முறிந்து விழுந்தது…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. அவ்வாறு வரும் பக்தர்கள், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் நீராடி விட்டு, அரங்கனை தரிசிக்க செல்வர். மேலும் இங்கு தங்கள் முன்னோர்களுக்கு   தர்ப்பணம் கொடுப்பர். இதனால் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில எப்போதும் கூட்டம் அலைமோதும். இந்த அம்மாமண்டபம் படித்துறையில் 70 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று உள்ளது. அம்மாமண்டபத்தின் பெரும்பாலான பகுதிக்கு நிழல் தரும் விருட்சகமாக இது விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக, இன்று ( 01.11.2023 ) காலை இந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது. கிளை முறியும் சத்தம் கேட்டு, தர்ப்பணம் கொடுத்தவர்கள், உஷாராகி ஓடிவிட்டனா். இருப்பினும் மரக்கிளை முறிந்து விழுந்த இடத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் கிளைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து அங்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி பணியாளர்கள் மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்