Rock Fort Times
Online News

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: டாக்டர் ராமதாஸ் அதிரடி…!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் சமீப காலமாக கருத்து மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆக., 17ம் தேதி புதுச்சேரியில் நடந்த பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை ஒழுங்கு நடவடிக்கை குழு சுமத்தியது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு, ஆக., 31க்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு, அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை. அதன்பிறகு, அவருக்கு இரண்டாவது தடவையாக, செப்., 10ம் தேதிக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அன்புமணி தரப்பில் இருந்து நோட்டீசிற்கு விளக்கம் தரப்படவில்லை. இந்தநிலையில், பாமக செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று முதல் (செப்.11) அன்புமணி நீக்கப்படுவதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தனி அணியைப் போல அன்புமணி செயல்பட்டு வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்