இசையமைப்பாளர் தேவாவின் இசையில் சமயபுரம் மாரியம்மனுக்கு பிரத்தியேக ஆன்மீக பாடல்…* மார்ச் 8-ம் தேதி ரிலீஸ் ஆகிறது !
சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், புகழ்பெற்ற ஆன்மீகத் திருத்தலங்களில் ஒன்றுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பூச்சொரிதல் விழாவும், அதைத் தொடர்ந்து நடைபெறும் தேரோட்டமும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் பிரபல திரைப்பட இசையமைப்பாளரான தேவாவின் இசையில் சமயபுரம் மாரியம்மனுக்கு புகழ் சேர்க்கும் வகையில், வாராளே…வாராளே….சமயபுரத்தாளே… புதிய ஆன்மீக பாடல் ஒன்று தயாராகி வருகிறது. இதற்கான இசையமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், வருகிற மார்ச் 8ம் தேதியன்று இந்த பாடலை கோவில் வளாகத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.