Rock Fort Times
Online News

திருச்சி அப்போலோ மருத்துவமனை சார்பில் இதய நோய் குறித்த கல்வி கருத்தரங்கு…

பிரபல இருதய நோய் சிகிச்சை மருத்துவா்கள் பங்கேற்றனர்...

திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சியில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மூத்த மருத்துவர்கள், இதய நோய் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போலோ மருத்துவமனையின் மதுரை கோட்ட தலைமை செயல்பாட்டு இயக்குனர் நீலகண்ணன் பேசுகையில்,

திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிநவீன சிகிச்சை முறைகள் குறித்தும், இதற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சக மருத்துவர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தார். மருத்துவக் கல்வி கவுரவ இயக்குநர் டாக்டர் சென்னியப்பன், இத்தகைய மருத்துவ கல்வி கருத்தரங்குகள் வாயிலாக மருத்துவர்கள் தங்களின் துறை சார்ந்த அறிவை பகிர்ந்து கொள்ள முடியும் என்றார். மேலும், சமீப காலத்தில் இதய செயலிழப்பு போன்ற சில இதய நோய்களின் நடைமுறை மற்றும் சிகிச்சை முறைகள் எப்படி மாறி உள்ளது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

அப்போலோ மருத்துவமனையின் திருச்சி பிரிவு தலைவர் மற்றும் இணை துணைத் தலைவர் ஜெயராமன் கூறுகையில்,

டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பல நோயாளிகள் டிரான்ஸ்கேதெட்டர் இதய வால்வு பொருத்துதல், நுண்துளை இதய அறுவை சிகிச்சை, ஹைப்ரிட் ரீவாஸ்குலரைசேஷன், பச்சிளங் குழந்தை பராமரிப்பு மற்றும் சிக்கலான மின் இயக்கவியல் ஆய்வுகள் உள்ளிட்ட அதிநவீன சேவைகளை எடுத்துரைத்தார்.மூத்த இதயநோய் நிபுணர் டாக்டர். காதர் சாஹிப் அஷ்ரஃப் பேசுகையில்,

அப்போலோ மருத்துவமனை பன்னோக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் மையமாகவும் , கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள் உள்ளிட்ட ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை சுகாதார மையங்கள் கிளைகளாகவும் செயல்படுவதாக குறிப்பிட்ட அவர், இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு பிரச்சினைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவிகரமாக இருப்பதாகவும் கூறினார்.

டாக்டர் ஷியாம் சுந்தர் கூறுகையில்,

ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசரகால மீட்பு சிகிச்சை நடை முறையில் நீண்ட பயணம் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டார். ஆரோக்கியமாக உள்ள நபர்களை பரிசோதித்து, முக்கிய நோய் காரணிகளை கண்டறிந்து ஆலோசனைகளை வழங்கும் அப்போலோ புரோ ஹெல்த் கார்டியாக் செக் அப் பேக்கேஜ் குறித்து இதய நோய் நிபுணர் டாக்டர் ரவீந்திரன் விளக்கினார்.
இதய அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஸ்ரீகாந்த் பூமனா மற்றும் டாக்டர் அரவிந்த் ஆகியோர் பேசினர்.அறுவை சிகிச்சை நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக நோயாளியின் ஐசியு பராமரிப்பு காலம் குறைந்துள்ளதாகவும், விரைவாக வீட்டுக்கு அனுப்ப முடிவதாகவும், தழும்புகளின் அளவு மற்றும் வலியும் குறைவாகவே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட் டாக்டர் விஜயசேகர், இதய துடிப்பு பிரச்சினைகளை கண்டறிவது மற்றும் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறினார். அதிக ஆபத்துக்கு வாய்ப்புள்ள நோயாளிக்கு விரிவான மற்றும் தரமான சிகிச்சையை முன்னெடுப்பதற்கு பன்னோக்கு அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது குறித்து இதய மயக்கவியல் மருத்துவர்கள் சரவணன் மற்றும் ரோகிணி ஆகியோர் எடுத்துரைத்தனர். மருத்துவ நிர்வாகி டாக்டர் சிவம், ஆம்புலன்ஸ்களில் முன் மருத்துவமனை சிகிச்சை துவக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் முதன்மை, இரண்டாம் நிலை சிகிச்சையுடன் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசினார். இந்த கருத்தரங்கை மூத்த இதய நோய் நிபுணர்கள் டாக்டர் ஆர் கிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஆர்.மணி வாசகம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்