திருச்சி, செங்குளம் காலனியில் ரூ.116.55 கோடியில் அரசு அலுவலர்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு…! * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம், செங்குளத்தில் ரூ.116.55 கோடி மதிப்பீட்டில் 464 குடியிருப்புகளுக்கான அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று(27-02-2025) திறந்து வைத்தார். இதனை முன்னிட்டு திருச்சி செங்குளம் காலனியில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து அரசு அலுவலர் குடியிருப்பினை பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் சரவணன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மதுரை சரக மேற்பார்வை பொறியாளர் எட்வின் சுந்தர்சிங், செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் சி.இருளப்பன், மதுரை சரக கணக்கு அலுவலர் சுதர்சணன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.