Rock Fort Times
Online News

வட மாநில இளைஞரை அவர் மனைவியின் கண் முன்னே தாக்கிய மது போதை வாலிபர். திருச்சியில் பரபரப்பு…. ( வீடியோ இணைப்பு )

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு கரூர் வழியாக திருச்சிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது கரூர் பேருந்து நிலையத்தில் அந்த பேருந்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் ஏறி உள்ளனர் அவர்கள் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்துள்ளனர் அப்பொழுது அங்கு மது போதையில் இருந்த ஒரு இளைஞரும் ஏறி அங்கு இருப்பவர்களிடம் தகராறில் அவ்வப்போது ஈடுபட்டு வந்துள்ளார் திருச்சி கம்பரசம்பேட்டை அருகே வந்த போது அங்கிருந்த ஒரு நபரிடம் திருச்சிக்கு பேருந்து எத்தனை மணிக்கு செல்லும் என கேட்டுள்ளார் அந்த இளைஞர் இன்னும் அரை மணி நேரத்தில் திருச்சி செல்லும் என கூறியுள்ளார் அப்பொழுது மது போதையில் இருந்த அந்த நபர் இன்னும் அரை மணி நேரம் ஆகுமா என கூறிக்கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்த வடமாநில இளைஞரை சரமாரியாக தாக்கினார் அங்கிருந்தவர்கள் அவரை தடுத்தனர் ஆனால் மீண்டும் மீண்டும் சென்று தாக்கியுள்ளார் உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை தடுத்து அமைதியாக அமர்ந்திருப்பவர்களை ஏன் அடிக்கிறீர்கள் என கேட்டு அவரிடம் கேள்வி எழுப்பினர் எல்லோரிடமும் அந்த இளைஞர் சண்டைக்கு சென்றார் மது அருந்திவிட்டு இவ்வாறு செய்யக்கூடாது என பேசும் போது நான் மது அருந்தவில்லை மாத்திரை தான் போட்டு உள்ளேன் என பதிலுக்கு பதில் அந்த இளைஞரும் பேசியுள்ளார் இதை பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் வீடியோவாக இந்த சம்பவங்களை எடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் ஆனால் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்து விடுகிறோம் எனக் கூறிய காவலர்கள் யாரும் பேருந்து நிலையத்திற்கு வரவில்லை வட மாநில இளைஞரை தாக்கிய இளைஞர் ஹாயாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார் அந்த இளைஞர் மதுரையை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய செய்தியால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அந்த விஷயம் பேசுபொருளானது இந்த நிலையில் எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்த ஒரு வடமாநில இளைஞரை மது போதையில் தாக்கிய இளைஞர் அதும் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதிலும் குறிப்பாக இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தகவல் தெரிந்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காதது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்