95-வது ஆஸ்கர் விருது விழா இன்று அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 23 பிரிவுகளில் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்தியர்களுக்கு இது ஸ்பெஷலான ஒரு ஆண்டாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் இந்திய படைப்புகளுக்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கும், தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற ஆவண குறும்படத்திற்கும் விருதுகள் கிடைத்துள்ளன. இதுதவிர ஆஸ்கர் விருது விழாவில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறிய திரைப்படம் தான் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere all at once). அமெரிக்க திரைப்படமான இது கடந்தாண்டு வெளியாகி இருந்தது. இப்படம் ஆஸ்கர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மொத்தம் 11 பிரிவுகளில் நாமினேட் ஆகி, அதில் 7 பிரிவுகளில் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.