Rock Fort Times
Online News

இந்தியாவுக்கு ‘செக்’ மேல் ‘செக்’ வைக்கும் அமெரிக்கா: எச் 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தினார் டிரம்ப்…!

எச் 1 பி விசாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, புதிய விசா மட்டுமின்றி, புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் தற்போது எச் 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தி டிரம்ப் அறிவித்து இருக்கிறார். புதிய விதிகள்படி, எச் – 1 பி விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்) கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு, புதிய விசா மட்டுமின்றி, புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்திட வேண்டி இந்த திட்டத்தை டிரம்ப் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த விசாவால் அதிகம் இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விசாக்களில் கடந்தாண்டு 70 சதவீதம் விசாக்களை இந்திய வல்லுனர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக எச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம் என அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவார்டு லுட்னிக் கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்