திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி காலை 08.30 மணியளவில் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ ரவுண்டானாவில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்காரின் உருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகதுறை அமைச்சருமான மாண்புமிகு கே.என்.நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்காரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.