சென்னை, திருச்சி உட்பட இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இன்று(அக். 13) மாலை 4 மணி வரை திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி- மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.