திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்ல வேண்டும்- * திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் துரை வைகோ எம்பி நேரில் வலியுறுத்தல்!
திருச்சி கோட்ட இரயில்வே மேலாளரை திருச்சி எம்பி துரை வைகோ நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-சோழன் விரைவு இரயிலை திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு தாங்கள் ஏற்கனவே ஒப்புதல் அளித்தும் இதுநாள் வரை நிறுத்தப்படவில்லை. இதனை முக்கிய கோரிக்கையாக கருதி விரைந்து நிறுத்திட உத்தரவிட வேண்டும். அத்துடன் செம்மொழி, எர்ணாகுளம் – காரைக்கால், இராமேஸ்வரம் – திருப்பதி, இராமேஸ்வரம் – சென்னை ஆகிய விரைவு இரயில்களையும் திருவெறும்பூர் இரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவண செய்திட வேண்டும். திருவெறும்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இரயில் நிலையம் செல்வதற்கு இரயில்வே காம்பவுண்ட் சுவர் ஒட்டிய பாதை தற்போது திறக்கப்பட்டு, அந்தப் பாதையில் மாநகராட்சி தார்ச் சாலைக்கும், இரயில் நிலைய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளத்திற்கும் இடையில் சுமார் 130 அடி மண் தரையாக உள்ள இடத்தில் சாலை அமைத்து தர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Comments are closed.