தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை 57 எம்பிக்களும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும்…- எச்.ராஜா…!
பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் எச்.ராஜா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு ரெக்கார்டு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஜனாதிபதியாக போட்டியிடும் பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது. அப்துல் கலாமை அவர்கள் ஆதரிக்கவில்லை. தமிழ், தமிழன், தமிழ்நாடு என பேசுவதெல்லாம் உதட்டளவில் தான். தமிழ் பற்று தி.மு.கழகத்திற்கு இல்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை 57 உறுப்பினர்களும் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் சி. பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும். தூய்மை பணியாளர் குறித்து திருமாவளவன் பேசியிருப்பது பட்டியல் இன சமூகத்திற்கு ஆதரவாக இல்லை என்பது தெரிகிறது. தமிழகத்திற்கு மீண்டும் பிரதமர் வருவார். இவ்வாறு எச். ராஜா கூறினார்.
Comments are closed.