Rock Fort Times
Online News

தொடர் விடுமுறை வருவதால் எகிறிய விமான கட்டணங்கள்: * சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.14,518 என நிர்ணயம்…!

சுதந்திர தினத்தையொட்டி நாளை (ஆகஸ்ட் 15) வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை நாளாகும். அதற்கு அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருகிறது. தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.இந்தப் பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. ரயில்களிலும் கிட்டத்தட்ட ரிசர்வேஷன் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விமான நிறுவனங்கள் விமான கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தி உள்ளன. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.1,827ஆக இருந்த விமான கட்டணம் ரூ.14,518 ஆகவும், கோவைக்கு ரூ.3,818ல் இருந்து ரூ.15,546 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னை – மதுரை செல்லும் விமான கட்டணம் ரூ.4,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.13,000 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, சேலம், திருச்சி, கோவைக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டண உயர்வால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்