திருச்சி மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களை கண்டித்து அதிமுக சார்பில் நாளை (ஜூலை 3) ஆர்ப்பாட்டம்…! * மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் அறிக்கை!
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திமுக அரசைக் கண்டித்தும், பஞ்சப்பூரில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை திறக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், திருச்சி மேரிஸ் மேம்பாலம், ஜங்ஷன் மேம்பாலம் ஆகியவற்றை விரைந்து முடிக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தலின்படி திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர், ஜெ.சீனிவாசன் முன்னிலையில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் திடலில் நாளை (ஜூலை 3) காலை 10 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.