வெயிலுக்கு மக்கள் தாகம் தணிக்க காட்டூரில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் அமைப்பு…* திருச்சி புறநகர், தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் திறந்து வைத்தார்!
கடும் வெயிலால் தவிக்கும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அரியமங்கலம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட காட்டூர் பெரியார் சிலை அருகில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழ வகைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அருணகிரி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.டி. கார்த்திக், ராவணன், பொதுக்குழு உறுப்பினர் சாந்தி, நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பேரூர் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராஜமணிகண்டன், பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம்.சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன், வட்ட கழக செயலாளர்கள் கணேசன், ரவிசங்கர், தெய்வமணிகண்டன், காட்டூர் மணி, வெங்கடேசன், கே.பி.சங்கர், சத்தியசீலன், அபிமன்யூ, நசீர் அகமது, நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரியமங்கலம் பகுதி செயலாளர் தண்டபாணி செய்திருந்தார்.
Comments are closed.