நெல்லை மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினராக பதவி வகித்து வருபவர் மனோஜ் பாண்டியன். இவர் இன்று(நவ.4) சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார் என்பதும், இதன் காரணமாக அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Comments are closed.