திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர கழகம், பேரூராட்சி கழகம், மற்றும் பகுதி கழகங்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் வழங்கி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் M.பாலசுப்பிரமணியன், A.தண்டபாணி, நகர கழக செயலாளர் SP.பாண்டியன், பேரூராட்சி கழக செயலாளர் பி.முத்துக்குமார், மற்றும் வட்ட கழக செயலாளர்கள் மற்றும் நகர, பேரூர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
