திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மலைக்கோட்டை பகுதி கீரைக்கடை பஜார் பகுதியில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் வனிதா, மாணவரணி மாவட்ட செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா, எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் கலிலுல் ரகுமான், பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, ரோஜர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன், தலைமை கழக பேச்சாளர் துகிலி நல்லுசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஜெ.சீனிவாசன் பேசுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அனைத்து தரப்பட்ட பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்தும் வகையில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். என்று பேசினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் சிங்கமுத்து, கே.பி ராமநாதன், நத்தர்ஷா, வாழைக்காய் மண்டி, சுரேஷ் , பாலக்கரை ரவீந்திரன், சகாபுதீன்,
இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம். மார்க்கெட் பிரகாஷ், அப்பாகுட்டி, கல்மந்தை விஜி , வக்கீல் ராஜா ஈஸ்வரன், ரஜினிகாந்த், தென்னூர் ஷாஜகான், இலியாஸ், கதிர்வேல், மலைக்கோட்டை ஜெகதீசன், வக்கீல்கள் முல்லை சுரேஷ் , முத்துமாரி, சுரேஷ், ஜெயராமன், சசிகுமார் மற்றும் தேவ் சரவணன், சதீஷ், பொன். அகிலாண்டம், குமார், கல்லுக்குழி முருகன், உடையான்ப்பட்டி செல்வம், அக்பர் அலி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.