Rock Fort Times
Online News

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு டெங்கு காய்ச்சல்

மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு சார்பாக 10 ஆயிரம் மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைஅடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்