திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பில், அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட 38, 43,43ஏ ஆகிய பகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை வகித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பூத் கமிட்டி, பூத் வாரியாக மகளிரணி, பூத் வாரியாக இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆகியவை அமைப்பது குறித்து கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. நிகழ்வில் அரியமங்கலம் பகுதிச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட துணைச் செயலாளர் சுபத்திரா சுப்ரமணியன், பகுதி அவை தலைவர் கோவிந்தராஜ், பகுதி துணை செயலாளர் ராம் வெங்கடேஷ், வட்டச் செயலாளர் ரவிசங்கர், கணேசன், வெங்கடேஷ், மணி தொண்டர்கள் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.