Rock Fort Times
Online News

எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை குறித்து மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் திருச்சிக்கு வருகிற 23-ம் தேதி வருகை தந்து 3 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெ.பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், நிர்வாகிகள் ஐயப்பன், ராஜசேகரன், ஜாக்குலீன், வனிதா, பத்மநாதன், கே.சி.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான கோகுலஇந்திரா, திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கழக பொதுச்செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்க அனைவரும் பாடுபட வேண்டும் என பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ரோஜர், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட்பிரபு, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன், கலீலுல் ரகுமான், சகாபுதீன், அப்பாஸ், ஞானசேகர்,பகுதி செயலாளர்கள் பூபதி, நாகநாதர் பாண்டி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, அன்பழகன், வாசுதேவன், ஏர்போர்ட் விஜி, புத்தூர் ராஜேந்திரன் கலைவாணன், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், நாட்ஸ் சொக்கலிங்கம், வர்த்தக பிரிவு ஆடிட்டர் ரவி, வழக்கறிஞர் பிரிவு வரகனேரி சசிகுமார், முல்லை சுரேஷ், முத்துமாரி, பாலக்கரை சதர், பேராசிரியர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்