அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்து கைதான அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்- இபிஎஸ் அதிரடி…!
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அ.தி.மு.க. ஐ.டி.விங் நிர்வாகி பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
“கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பிரசாத் (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர்) இன்று (ஜூன் 7) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உறுப்பினர்கள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என
அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.