கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2011-16ம் ஆண்டில் அதிமுக எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் சத்யா. சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம்
நகராட்சி தலைவராக இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தநிலையில் பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பண்ருட்டி மற்றும் சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 950
Comments are closed, but trackbacks and pingbacks are open.