அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் 25-04-2025 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கூட்டத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி ஏற்பட்டது குறித்தும், வருகிற சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
Comments are closed.