தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அதிமுக தேர்தல் பணிகளில் விறுவிறுப்பு காட்டி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். இதனிடையே ஆக.30-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். அதன்படி, 30-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், மீதம் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள், கட்சியில் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பது, ஐடி விங்-ன் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Comments are closed.