Rock Fort Times
Online News

அதிமுக மாநாட்டிற்கு சசிகலா தினகரனுக்கு அழைப்பு உண்டா திருச்சியில் ஓபிஎஸ் பேட்டி !

ஏப்ரல் 24ஆம் தேதி ஓ பன்னீர்செல்வம் அணியினரின் அதிமுக மாநாடு வரும் 24ம் தேதி திருச்சியில் நடக்கிறது .மாநாட்டுக்கான கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக-வை மீட்க சட்டப்படியும் போராடுவோம். மக்களையும் சந்தித்து நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபணம் செய்வோம். சட்ட விதியை திருத்தி கட்சியை சர்வாதிகார கும்பல் அபகரிப்பு செய்திருப்பதை மீட்கும் மாநாடாக திருச்சியில் ஏப்.24ல் நடைபெறும் மாநாடு அமையும். தொண்டர்களுக்கு எம்ஜிஆர் தந்த உரிமை மீட்டெடுக்கப்படும். சட்டப் போராட்டத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் வெற்றி பெறுவர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பணிபுரிந்த அனைவரும் ஒருங்கிணைந்து, ஒன்றிணைந்து இயக்கத்தை நடத்தும் வகையில் நாங்கள் பயணிப்போம். வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்பட அனைவருக்கும் அழைப்பு விடுப்போமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நல்லது நடக்கும். ஒன்றரை கோடி தொண்டர்களின் குரலாக ஒலிக்கிறது எங்கள் குரல். தொண்டர்கள் நினைத்தால் எதுவும் வெற்றிகரமாக முடியும். எதிர்பார்த்தது நடைபெறும். எந்த நேரத்திலும் அனைவரும் ஒருங்கிணந்த வலுவான இயக்கம் கட்டமைக்கப்படும். கர்நாடக பேரவைத் தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம். இரட்டை இலையை நாங்கள் கேட்டுப்பெறுவோம். திருச்சி மாநாடு இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் இருக்கும் என்றார். திமுக அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மாநாட்டில் விரிவாக தெரிவிப்போம் என பதில் அளித்தார்.

     

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்