சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டம் வாரியாக அ.தி.மு.க. ஐ.டி.விங் பொறுப்பாளர்கள் நியமனம்…* திருச்சி தெற்கு, வடக்கு, மாநகருக்கு யார்-யார்?…
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்திடும் வகையில், சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், பூத் கிளைக் கழகங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள பூத் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு தக்க பயிற்சி அளித்து, தேர்தல் பணிகளில் அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்வதற்கும், ஒவ்வொரு பூத்திற்கும் உட்பட்ட இடங்களில் வசித்து வரும் மக்களிடையே வீடுதோறும் சென்று, தி.மு.க.வின் பொய் வாக்குறுதிகள் மற்றும் தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்களை எடுத்துக் கூறுவதற்கும், மக்கள் நலன் கருதி அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் நிறைவேற்றப்பட்ட முத்தான திட்டங்களை விளக்கமாக எடுத்துக் கூறுவதற்குமான பணிகளை முறைப்படுத்தி செயல்படுத்துவதற்காக, மாவட்டங்களுக்கு ஐ.டி.விங் பொறுப்பாளர்கள் நியமிக்கபடுகிறார்கள். அதன்படி திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு அறிவு அரவிந்தன், திருமால் முருகன், சிவலிங்கம் ஆகியோரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு சிவா, விஸ்வேஸ்வரன், திருநாவுக்கரசு ஆகியோரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு சதீஷ்குமார், ரஞ்சித்குமார், பிரியா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இதேபோல பெரம்பலூர் மாவட்டம் – கவியரசு, திருப்புகழ் செல்லதுரை, நாகராஜன். அரியலூர் மாவட்டம் – கிர்ஷாந்த் சுப்ரமணியம், ராதா வேங்கடநாதன், வெங்கட்பிரபு. புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் – கோபாலகிருஷ்ணன், திருமுருகன், ராகுல். புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் – சுரேஷ்குமார், புள்ளம்பாடி பழனிச்சாமி, காசிராமன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.