தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அப்போது ரொக்க தொகையும் வழங்கப்படும். வழக்கம்போல இந்தாண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், நிதி நிலைமை காரணமாக ரொக்கம் வழங்கப்படவில்லை. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 8 லட்சத்து 33 ஆயிரத்து 131 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 968 குடும்பங்கள் என மொத்தம் 8 லட்சத்து 34 ஆயிரத்து 99 குடும்பங்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும். அதன்படி, 1,291 நியாய விலைக்கடைகள் மூலம் இதுவரை 84 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி உள்ளனர். 14 சதவீதம் பேர் இன்னும் வாங்கவில்லை. ஆகவே, பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காத அனைவருக்கும் ஜனவரி 25 தேதிக்குள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.