Rock Fort Times
Online News

திருச்சியில் வாக்களித்த பின் அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேட்டி…!

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்று(19-04-2024) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி தொகுதியில் 1,665 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டு கொண்டு உள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிற நிலை வந்துள்ளது. மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைப்போம் என கூறுகிறார்கள். அவ்வாறெல்லாம் நடக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பெரும்பான்மை பெறும். தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள். சேலத்தில் வெற்றி பெறப்போவது செல்வகணபதி தான்.
பாஜக டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்