திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனி ஐந்தாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 38). இவர் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். செந்தில்குமார், பூலாங்குளத்துப்பட்டியில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மர்ம மனிதர்கள் முத்துலட்சுமி வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவையும் உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர். பணி முடிந்து வீட்டிற்கு வந்த முத்துலட்சுமி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து ஏட்டு முத்துலட்சுமி வீட்டில் நகைகளை திருடிய மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.