வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடக்கவிருக்கும் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திருச்சி மாநகா், புறநகா் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் சாா்பில் திருச்சி கருமண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று ( 01.08.2023 ) நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி.யும், திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமாா் தலைமை தாங்கினாா். வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி முன்னிலை வகித்தாா். மாநில எம்.ஜி.ஆா்.இளைஞரணி இணைச் செயலாளா் ஜெ. சீனிவாசன் வரவேற்றாா். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, என். ஆா். சிவபதி, விஜயபாஸ்கர் , வளா்மதி, பூனாட்சி, அண்ணாவி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, எஸ்.பி.,வேலுமணி, கே.பி. முனுசாமி, காமராஜ், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:- “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக மதுரைக்காரன் என்ற முறையில் மாவட்டந்தோறும் நடக்கின்ற கூட்டத்திற்கு சென்று தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து மதுரை மாநாட்டிற்கு அழைப்பு விடுங்கள் என்றார் பொதுச்செயலாளர். ஒரு சிலர் கட்சியை கேலி செய்தனர். அவர்கள் தற்போது வாய் மூடி போய்விட்டனர். இந்திய துணைக்கண்டத்தில் மூன்றாவது கட்சியாகவும், உலகத்திலே 7-வது பெரிய கட்சியாகவும் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளார். அனைவரும் மதுரைக்கு வாருங்கள். இந்த மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பையை வாங்கிக் கொண்டு சுவர் ஏறி குதித்ததை நாம் பார்த்தோம். கருணாநிதி பல சோதனைகளை தாண்டி கட்சி நடத்தினார். ஆனால், ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் ஸ்டாலின் போல் மோசமான ஆட்சியை கொடுத்தது எந்த முதலமைச்சரும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல் , எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணை செயலாளர் பொன் செல்வராஜ், முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர். மனோகரன், ஆவின் தலைவா் கார்த்திகேயன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன், அழகாபுரி செல்வராஜ், முத்து கருப்பன், துறையூர் பிரகாஷ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், திருச்சி மாநகராட்சி அ.தி.மு.க. தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி, கவுன்சிலர் அரவிந்தன், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், என்ஜினீயர்கள் இப்ராம்ஷா, ரமேஷ் மற்றும் அப்பாக்குட்டி, என்ஜினீயர் ராஜா, ராவணன், எஸ்.பி.பாண்டியன், துவாக்குடி சுரேஷ்குமார், வண்ணாரபேட்டை ராஜன் மற்றும் இளைஞர்- இளம்பெண்கள் பாசறை, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.