Rock Fort Times
Online News

கூட்டணியாவது…கூந்தலாவது… இனி பேச்சு இல்லை வீச்சு தான்…. அதிமுக- பாஜக போஸ்டர் யுத்தம்!!!

பேரறிஞர் அண்ணா பற்றிய அண்ணாமலையின் சர்ச்சை கருத்தால் அதிமுக – பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அறிவித்தார். இதனை வரவேற்று தூத்துக்குடியில் அதிமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பாஜகவினரை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டியில், “விநாயகர் சதுர்த்தி நாளில் பிள்ளையார் சுழி போட்டாச்சு” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. “கூட்டணியாவது, கூந்தலாவது, நன்றி மீண்டும் வராதீர்கள்” என்று பாஜகவை கடுமையாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், அதிமுகவினர் ஒட்டிய சுவரொட்டிகளுக்கு பதிலடியாக மதுரையில் திரைப்பட வசனத்தை குறிப்பிட்டு பாஜகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது…வீச்சுதான்…என பாஜக தனது போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்