Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு…!

திருச்சி, சமயபுரம், மாரியம்மன் கோவில் ஓதுவார் பயிற்சி பள்ளியில் 3 ஆண்டுகள் முழு நேரம் மற்றும் 4 ஆண்டுகள் பகுதி நேரம் சான்றிதழ் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இந்து மதத்தை சேர்ந்த கீழ்காணும் தகுதி உடையவர்களிடமிருந்து வருகிற 10.09.2025-ம் தேதி மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.13 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். நல்ல குரல்வளம் பெற்றிருக்க வேண்டும். இந்து சைவ சமயக் கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும். முழு நேரம் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத் தொகை, உணவு, உடை, தங்கும் இடம், மருத்துவ வசதி திருக்கோயில் மூலம் கட்டணமில்லாமல் வழங்கப்படும். பகுதி நேரம் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.5000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். ஓதுவார் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஓதுவார் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான சேர்க்கை படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில், அலுவலக நேரங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், https://samayapurammariamman.hrce.tn.gov.in/  என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-621112 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு  jceotry_25704.hrce@tn.gov.in ; symmariamman@gmail.com என்ற இணைய தளத்திலோ அல்லது 0431-2670460, 8012012087, 7010244199 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்