சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய முன்பதிவுகள் அதிகம் நடைபெறும். அந்தவகையில் ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஐப்பசி மாத முகூர்த்த நாட்கள் என்ற அடிப்படையில் வரும் 24-ந்தேதி(நாளை) மற்றும் 27-ந்தேதி ஆகிய இரு தினங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி வழக்கமாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில் 150 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல் 200 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், அதிக பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு கூடுதலாக சாதாரண மற்றும் தட்கல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.