Rock Fort Times
Online News

தமிழகத்தில் பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவப் படையினர் நியமனம்…* தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்!

தமிழக சட்​டப்​ பேர​வைப் பொதுத்​தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது. வேட்பு மனுத் தாக்​கல் மற்​றும் மனுக்​கள் பரிசீலனை முடிந்​துள்ள நிலை​யில், நாளை( ஏப்.9) இறுதி வேட்​பாளர் பட்​டியல் வெளி​யிடப்பட உள்​ளது. இந்​நிலை​யில், தேர்​தலுக்​கான ஏற்​பாடு​கள் குறித்து தமிழகத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் கூறிய​தாவது: தற்​போது தமிழகம் முழு​வதும் உள்ள 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் அமைந்​துள்ள பள்​ளிக் கட்டிடங்​கள் உள்​ளிட்ட இடங்​களில் தண்​ணீர், கழிப்​பறை மற்​றும் சாய்​தளம் போன்ற அடிப்​படை வசதி​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. தமிழகம் முழு​வதும் 5,938 வாக்​குச்​சாவடிகள் பதற்​றம் மற்​றும் மிக​வும் பதற்​ற​மானவை பட்​டியலில் உள்​ளன. கடந்த தேர்​தல்​களை விட தற்​போது எண்​ணிக்கை குறைந்​துள்​ளதுடன் இடங்​களும் மாறி உள்​ளன. கடைசி​யாக கண்​டறியப்​படும் பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் எண்​ணிக்​கை​யில் துணை ராணுவப் படை​யினர் நியமிக்கப்படுவார்​கள். ஒரே இடத்​தில் 10-க்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் இருந்​தால் அங்கு துணை ராணுவப் படை​யினர் அதி​கள​வில் நிறுத்​தப்​படு​வார்​கள். தமிழகத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட துணை ராணுவப் படை​யினர் ஏப்​.13-ம் தேதிக்​குள் வந்​து​விடு​வார் கள். இந்​தத் தேர்​தலுக்கு ரூ.1,302 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2024 நாடாளு​மன்​றத் தேர்​தலின் போது ரூ.1,009 கோடி, முந்​தைய 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் போது ரூ.795 கோடி செல​வானது. தமிழகத்​தில் சிறப்பு தீவிர வாக்​காளர் சரி​பார்ப்​புப் பணி​கள் முடிந்து கடந்த பிப்​.23-ம் தேதி இறுதி வாக்​காளர்​கள் பட்​டியல் வெளி​யானது. அப்​பட்​டியலின்​படி, 2,77,38,925 ஆண், 2,89,60,838 பெண், 7,617 இதர வாக்​காளர்​கள் என மொத்​தம் 5,67,07,380 வாக்​காளர்​கள் இடம் பெற்றிருந்​தனர். இதில் 18 முதல் 19 வயதுக்கு உட்​பட்ட வாக்​காளர்​களின் எண்​ணிக்கை 12.51 லட்​சம். மாற்​றுத்​திற​னாளி​கள் என குறிக்​கப்​பட்ட வாக்​காளர்​கள் 4.63 லட்​சம், 85 வயதுக்கு மேற்​பட்ட மூத்த குடிமக்​கள் 8.99 லட்​ச​மாக உள்​ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்