தஞ்சாவூர் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை- செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. மயிலாடுதுறை- செங்கோட்டை ரயிலில் பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகனிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று மே 27 முதல் வண்டி எண் 16847/16848 மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகள் இணைத்து 14 பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதை வரவேற்றுள்ள பயணிகள், ரயிலை மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை அல்லது காட்பாடி வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர்.
Comments are closed.