தலைக்கேறிய கஞ்சா போதை ! சமயபுரத்தில் அரசுப்பேருந்தை வழிமறித்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்! நால்வருக்கு போலீசார் வலை!
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முக்கியமானது திருச்சி அருகேயுள்ள சமயபுரம். இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகைதந்து அம்மனை வணங்கி வழிபடுவது வழங்கம். சந்தனமும் குங்குமமும் கமகக்க வேண்டிய ஊரில், சமீபகாலமாக கஞ்சா போதை தலைவிரித்தாடுகிறது.கஞ்சா போதை தலைக்கேறி கண்ணில் பபடும் நபர்களையெல்லாம் கத்தியை காட்டி மிரட்டுவதும், வழிப்பறி செய்வதும் அதிகரித்து வருகிறது.இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் சூழல் நிலவி வருவதாக குமுறுகிறார்கள் உள்ளூர்வாசிகள். இதை மெய்ப்பிக்கும் வகையில் சமயபுரத்தில் நேற்று ( ஜூலை -4 )இரவு கஞ்சா போதை ஆசாமிகள் அரசு பேருந்தினை வழிமறித்து டிரைவர், கண்டக்டரை தாக்கியதுடன் அதனை தட்டி கேட்ட பயணிகளையும் அடித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது., திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் வழியாக பெருவளப்பூர் செல்லும் அரசு பேருந்து, வியாழக்கிழமை இரவு ஒன்பது மணி அளவில் கல்லுக்குழி கிராமத்தை கடந்திருக்கிறது.அப்போது திடீரென அரசு பேருந்தினை வழிமறித்த அடையாளம் தெரியாத நான்கு கஞ்சா போதை ஆசாமிகள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.இதனை தட்டிக் கேட்க பயணிகளையும் கஞ்சாபோதையில் இருந்தவர்கள் தாக்கியதுடன் கத்தியை காட்டியும் மிரட்டியுள்ளனர். பஸ்ஸில் பயணத்தவர்கள் இது குறித்து சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அறிந்த கஞ்சா போதை ஆசாமிகள் தப்பி சென்றனர் சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார், இது குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தி தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.


Comments are closed.