Rock Fort Times
Online News

நடிகை மனோரமாவின் மகன் மற்றும் இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் மரணம்…!

தமிழ்த் திரைப்படங்களில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர் மனோரமா. கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம், மனோரமா மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி(70). இவர், சமீப காலமாக மூச்சு திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் தனது அம்மா மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே இன்று( அக்.23) காலை இவரது உயிர் பிரிந்தது. நடிகர் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி, அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். மகனுக்காக தூரத்து பச்சை என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். ஆனால், அந்தப் படம் சரியாக ஓடவில்லை. சீரியல்கள் சிலவற்றிலும் பூபதி நடித்தார். பூபதிக்கு ராஜராஜன் என்ற மகனும், அபிராமி, மீனாட்சி என்கிற மகள்களும் உள்ளனர். நாளை இறுதி சடங்கு நடக்கிறது. அதேபோல், இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சபேஷ் (68) சென்னையில் காலமானார். இம்சை அரசன், 23ம் புலிகேசி உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இவர் இசை அமைத்துள்ளார். ஒரேநாளில் இரண்டு திரை பிரபலங்கள் மரணம் அடைந்ததால் தமிழ் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்